புதுடெல்லி: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த கோல்கீப்பர்களாக இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், மகளிர் ஹாக்கி அணியின் சவிதா பூனியா ஆகியோர் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான வாக்கெடுப்பில் ஸ்ரீஜேஷ் 39.9 புள்ளிகள் பெற்றார். பெல்ஜியத்தின் லோயிக்வான் டோரன் 26.3 புள்ளிகளையும், நெதர்லாந்தின் பிர்மின் பிளாக் 23.2 புள்ளிகளையும் பெற்றனர். இந்த தேர்வுக்கான வாக்கெடுப்பு ஹாக்கி வல்லுநர்கள் (40 சதவீதம்), அணிகள் (20 சதவீதம்), ரசிகர்கள் (20 சதவீதம்) மற்றும் ஊடகங்கள் (20 சதவீதம்) மூலம் ஆன்லைனில் அளிக்கப்பட்டன.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த கோல்கீப்பர் விருதுக்கு ஸ்ரீஜேஷ் தொடர்ச்சியாக 2-வது முறையாக தேர்வாகி உள்ளார். மகளிர் பிரிவில் சிறந்த கோல்கீப்பராக இந்திய அணியின் சவிதா பூனியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான வாக்கெடுப்பில் சவிதா 37.6 புள்ளிகள் பெற்றார். அர்ஜென்டினாவின் பெலன் சுசி 26.4 புள்ளிகளையும், ஆஸ்திரேலியாவின் ஜோஸ்லின் பார்டம் 16 புள்ளிகளையும் பெற்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago