பின்ச், மேத்யூ வேட் விளாசலில் ஆஸி. வெற்றி

By செய்திப்பிரிவு

கராரா: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பின்ச், மேத்யூ வேட் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலியாவின் கராரா நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. கைல் மேயர்ஸ் 39, ஒடியன் ஸ்மித் 27, ரேமன் ரைஃபர் 19, பிரண்டன் கிங் 12 ரன்கள் சேர்த்தனர்.

146 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 53 பந்துகளில், 58 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

ஷெல்டன் காட்ரெல் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க் களத்தில் இருந்தனர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மேத்யூ வேட் அடுத்த இரு பந்துகளில் 3 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து வீசப்பட்ட இரு பந்துகளிலும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேத்யூ வேட் 39 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களும் சேர்த்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE