மன்கட் அவுட் எச்சரிக்கை கொடுத்த தீபக் சஹார்: நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்

By செய்திப்பிரிவு

இந்தூர்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடிய மூன்றாவது டி20 போட்டியில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஸ்டப்ஸுக்கு இந்திய பவுலர் தீபக் சஹார் மன்கட் முறை ரன்-அவுட் வார்னிங் கொடுத்திருந்தார். அதற்கு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் ரியாக்ட் செய்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் அடங்கும். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவடைந்துள்ளது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. கடைசி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்த போட்டியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து 227 ரன்கள் குவித்தது. அந்த இன்னிங்ஸின் 16-வது ஓவரை தீபக் சஹார் வீசி இருந்தார். அவர் பந்து வீசுவதற்கு முன்பாகவே நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஸ்டப்ஸ் சிங்கிள் எடுக்க கிரிஸை விட்டு சில அடி தூரம் நகர்ந்து சென்றிருந்தார். அதை கவனித்த சஹார் ‘ரன்-அவுட்’ செய்ய வாய்ப்பு உள்ளதாக அவரை மென்மையான முறையில் எச்சரித்திருந்தார். அது ஆட்டத்தில் பார்வையாளர்களின் கவனத்தை ஈரத்திருந்தது.

அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா இங்கிலாந்து வீராங்கனை சார்லியை இந்த முறையில் ரன்-அவுட் செய்திருந்தார். இது சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதற்குள் சஹார் இப்படி செய்துள்ளார்.

நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்: “மன்கட் அவுட் விதி இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக மட்டும் தான் பயன்படுத்தப்படும்”, “பவுண்டரி லைனில் உள்ள அஸ்வினின் மைண்ட் வாய்ஸ்?”, “தீப்தி இல்லை இது தீபக்” என அது நீள்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்