தொடர் ஓட்டத்தில் சாதனையுடன் தங்கம் வென்றது தமிழக அணி

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான நீச்சலில் 4x100 மீட்டர் ஃப்ரீஸ்டைல்ரி லேவில் கர்நாடகா அணி இலக்கை 3:27.32 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றது.

தமிழக அணி 3:29.28 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. மகளிருக்கான 4x100 மீட்டர்ஃப்ரீஸ்டைல் ரிலேவில் தமிழக அணி இலக்கை 3:14.20 விநாடிகளில் எட்டி வெண்கலம் பெற்றது. ஆடவருக்கான 200 மீட்டர்ஃப்ரீஸ்டைல் பிரிவில் கர்நாடகாவின் அனீஷ் கவுடா 1:51.88 விநாடிகளில் இலக்கை எட்டி தேசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ல் ஆரோன்டிசோசா 1:52.05 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.

தடகளத்தில் ஆடவருக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழக அணி பந்தய தூரத்தை 3:09.42 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. அதேவேளையில் மகளிருக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் திவ்யா, வித்யா ராமராஜ், ஒலிம்பியா ஸ்டிஃபை, சுபா வெங்கடேசன் ஆகியோரை உள்ளடக்கிய தமிழக அணி பந்தய தூரத்தை 3:35.32 விநாடிகளில் கடந்து தேசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றது.இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு கேரளா அணி 3:35.34 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. ஹரியாணா (3:35.86) வெள்ளிப் பதக்கமும், கர்நாடகா (3:36.50) வெண்கலப் பதக்கமும் பெற்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்