ஐசிசி டி 20 கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடம் பிடித்தார் சூர்யகுமார் யாதவ்

By செய்திப்பிரிவு

துபாய்: ஐசிசி டி 20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டி 20 ஆட்டத்தில் 36 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்ததன் மூலம் சூர்யகுமார் யாதவ், ஐசிசி தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 801 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தை அடைவது இது 2-வது முறையாகும். கடந்த ஆகஸ்ட் மாதமும் அவர், இந்த இடத்தை எட்டியிருந்தார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 13-வது இடத்தில் உள்ளார். விராட் கோலி ஓர் இடம் முன்னேறி 15-வது இடத்திலும், கே.எல்.ராகுல் 22-வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தானின் பாபர் அஸம் 3-வது இடம் வகிக்கிறார். முதலிடத்தில் அதேநாட்டைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் தொடர்கிறார்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார். இந்தியாவின் அக்சர் படேல் 18-வது இடத்துக்கும், யுவேந்திர சாஹல் 26-வது இடத்துக்கும், ஹர்ஷால் படேல்37-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். புவனேஷ்வர் குமார் ஓர் இடம் பின் தங்கி 10-வது இடத்தில் உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்