நியூயார்க்: ஜூலியஸ் பேர் ஜெனரேஷன் கோப்பைக்கான செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இறுதி சுற்றில் அவர், உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுடன் மோதுகிறார்.
இணையதளம் வாயிலாக நடைபெற்று வரும் இந்தத் தொடரின் அரை இறுதி சுற்றில் அர்ஜூன் எரிகைசி, வியட்நாமின் லியம் குவாங் லீயை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆன நிலையில் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜூன் எரிகைசி இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இறுதி சுற்றில் அர்ஜூன் எரிகைசி, உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதுகிறார். கார்ல்சன் அரை இறுதி சுற்றில் 3-1 என்ற கணக்கில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை தோற்கடித்தார். இறுதி சுற்று இரு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பட்டம் வெல்பவருக்கு ரூ.1.22 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago