சிக்ஸர் விளாசிய சச்சின்: பழைய நினைவுகளில் மூழ்கிய ரசிகர்கள்!

By செய்திப்பிரிவு

டேராடூன்: சாலைப் பாதுகாப்பு டி20 தொடரில் முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். இந்த இன்னிங்ஸில் கிரீஸுக்கு வெளியே இறங்கி வந்து ஒரு சிக்ஸர் விளாசி இருந்தார். அது அவரது பழைய ஆட்டத்தை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதனை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா லெஜெண்ட்ஸ் அணி உட்பட மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்தத் தொடரில் வியாழக்கிழமை இந்தியா லெஜெண்ட்ஸ் மற்றும் இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸை இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்தது. மழை காரணமாக இந்த போட்டி 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. அந்த இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது.

இந்திய அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கிய சச்சின், 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 200. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் 5-வது பந்தில் சச்சின், கிரீஸூக்கு வெளியே இறங்கி வந்து ஒரு சிக்ஸர் விளாசி இருந்தார். அது அவரது 1998 ஷார்ஜா இன்னிங்ஸை நினைவுப்படுத்தும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

‘உங்களுக்கு இன்னும் வயசு ஆகல’, ‘டி20 டீம்ல சச்சின் சேக்கணும்’, ‘சும்மாவா சொன்னாங்க மாஸ்டர் தி பிளாஸ்டர்னு’, ‘டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் பேக்-அப் ஓப்பனராக சச்சின் டிக் செய்யலாம்’, ‘களத்தில் கிரிக்கெட் கடவுள்’, ‘49 வயசாகுது. ஆனாலும் இன்னும் அவர் களத்தில் ஆதிக்கம் செலுத்தி உள்ளார்’ என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்