நியூயார்க்: மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் 2022 பருவத்தின் 5-வது தொடராக ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டி இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று முன்தினம் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி 9-வது சுற்றில் உக்ரைனின் வாசில் இவான்சுக்கை வீழ்த்தினார். தொடர்ந்து 10-வது சுற்றில் போலந்தின் ஜான்-கிரிஸ்டோஃப் டுடாவிடம் தோல்வியடைந்தார். 11-வது சுற்றில் இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்ட்டுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்த அர்ஜூன் எரிகைசி, அடுத்த சுற்றில் அமெரிக்காவின் கிறிஸ்டோபரை வீழ்த்தினார்.
17-வது வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 4 சுற்றுகளையும் டிராவில் முடித்தார். 12 சுற்றுகளின் முடிவில் உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன் 25 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 24 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 19 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். வியட்நாமின் குவாங் லீம் லி 20 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறினார். இந்தத் தொடரில் இன்னும் 3 சுற்றுகள் மீதம் உள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago