வெளியானது இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டி20 ஜெர்சி!

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டி20 கிரிக்கெட் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. One Blue Jersey என்ற பெயரில் இந்த ஜெர்சி பிராண்ட் செய்யப்பட்டு வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஹர்மன்ப்ரீத் கவுர், ஷெஃபாலி வர்மா, ரேணுகா சிங் ஆகியோர் புதிய ஜெர்சியில் மிளிர்கின்றனர்.

இந்த புதிய ஜெர்சியின் கை பகுதி கருநீல வண்ணத்திலும், உடல் பகுதி வெளிர் நீல வண்ணத்திலும் உள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்திய அணியின் புதிய ஜெர்சி மீது எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த வகையில் மீண்டும் பழையபடி வெளிர் நீல வண்ணத்திற்கு திரும்பியுள்ளது இந்திய அணியின் ஜெர்சி. இனி டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்த புதிய ஜெர்சியை அணிந்து கொண்டுதான் இந்திய அணி விளையாடும் என தெரிகிறது.

ஆஸ்திரேலியா தொடர், தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இந்த புதிய ஜெர்சியை அணிந்து விளையாடும் என தெரிகிறது. ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி வீரர்கள் இந்த ஜெர்சியை அணிந்து விளையாடுவார்கள்.

“கிரிக்கெட் ரசிகர்களே இது உங்களுக்கானது. எம்பிஎல் ஸ்போர்ட் வழங்கியுள்ள One Blue Jersey” என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. கடைசியாக 2007-08 சீசனில் இந்திய அணில் வெளிர் நீலத்திலான ஜெர்சியை அணிந்து விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்