சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் கனடாவின் யுஜின் பவுச்சார்டு அர்ஜெண்டினாவின் நாடியா பொடோரோஸ்கோவை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாடியா பொடோரோஸ்கோ 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3-வது டி 20-ல் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் டி 20 தொடரை 1-2 என இழந்தது. 123 ரன்களை விரட்டிய இங்கிலாந்து அணி 10 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது.
பிரபல அமெரிக்க கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டான் கடந்த 1998-ம் ஆண்டு என்பிஏ இறுதிப் போட்டியில் அணிந்திருந்த சீருடை சுமார் ரூ.80.50 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் சீருடை இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவது இதுவே முதன்முறை.
நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஏ அணி விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய ஏ அணியில் இளம் ஆல்ரவுண்டரான ராஜ் அங்கத் பாவா சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரரை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago