விளையாட்டு

T20 WC | இந்தியா - பாக். போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன

செய்திப்பிரிவு

துபாய்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் அக்டோபர் 23-ம் தேதி மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்துக்கான அனைத்து டிக்கெட்களும் விற்பனையாகி விட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காண்பதற்காக மட்டும் 50 ஆயிரம் ரசிகர்கள் டிக்கெட்களை வாங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்டோபர் 23-ம் தேதி மெல்பர்ன் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. அதிகாரப்பூர்வமான டிக்கெட் மறுவிற்பனைக்கான தளம், போட்டி நெருங்கும் நேரத்தில் தொடங்கப்படும். இதில் ஏற்கெனவே டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் தங்களது டிக்கெட்களை பரிமாறிக்கொள்ளலாம்.

16 சர்வதேச அணிகளைச் சேர்ந்த உலகின் சிறந்த வீரர்கள் கலந்து கொள்ளும் தொடரின் ஆட்டங்களை பார்வையிட 82 நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் இதுவரை டிக்கெட்கள் வாங்கியுள்ளனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT