லாகூர்: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அறிவித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். அந்த அணியில் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி இடம்பிடித்துள்ளார். அதே நேரத்தில் மற்றொரு நட்சத்திர பேட்ஸ்மேனான ஃபாக்கர் ஜாமான் ரிசர்வ் வீரராக அணியில் இடம்பெற்றுள்ளது சர்ப்ரைஸ் சாய்ஸாக உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கின் முன்னணி அணிகள் வீரர்களின் விவரங்களை வெளியிட்டு வருகின்றன. இதில் இந்தியாவும் அடங்கும். அந்த லிஸ்டில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது பாகிஸ்தான்.
அணி விவரம்: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது வாசிம், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஷான் மசூத், உஸ்மான்.
ரிசர்வ் வீரர்கள்: ஃபாக்கர் ஜாமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி.
ஷாஹீன் அஃப்ரிடியின் வரவு அந்த அணிக்கு பலமாகவே அமைந்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டருக்கு வலு சேர்க்கும் ஃபாக்கர் ஜாமான் ரிசர்வ் வீரராக இடம்பெற்றுள்ளார். அவர் ஆசிய கோப்பை தொடரில் ரன் சேர்க்க தவறியது இதற்கு காரணமாகத் தெரிகிறது.