ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பு குறித்து டேவிட் வார்னர் மனம் திறந்துள்ளார். அண்மையில் அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் தனது ஓய்வை அறிவித்திருந்தார். அதையடுத்து அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், வார்னர் அது குறித்து பேசியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 96 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 91 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 16300 ரன்களை குவித்துள்ளார். இருப்பினும் களத்தில் அவர் செய்த குற்றத்திற்காக அணியை தலைமை தாங்கும் கேப்டன் பொறுப்பை அவர் வகிக்க வாழ்நாள் தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். அந்த தடையை நீக்க வேண்டும் என்று ஆலன் பார்டர் காட்டமாக தெரிவித்திருந்தார்.
கடந்த 2018-இல் தென்னாப்பிரிக்க நாட்டில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடியது. அந்த பயணத்தில் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விதிகளுக்கு அப்பாற்பட்டு பந்தை உப்புக் காகிதம் கொண்டு தேய்த்த குற்றத்திற்காக அப்போதைய ஆஸி. அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பாங்கிராஃப்ட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, அணிக்கு கேப்டனாக தலைமை தாங்க வார்னருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக தெரிகிறது.
» தமிழகத்தில் புதிதாக 421 பேருக்கு கரோனா பாதிப்பு
» பட்ஜெட் விலையில் நார்சோ 50i பிரைம் போனை அறிமுகம் செய்த ரியல்மி: விலை & சிறப்பு அம்சங்கள்
“என்னுடைய போன் இங்கு தான் உள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பு குறித்து போன் செய்து பேசலாம். கடந்த காலத்தில் எது நடந்ததோ அது நடந்து முடிந்தது. இதில் நல்லதொரு விஷயம் என்னவென்றால் புதிய வாரியம் தற்போது அமைந்துள்ளது. என்னுடன் வாரியம் என்ன பேச நினைத்தாலும் அது குறித்து மகிழ்ச்சியுடன் பேச நானும் தயார். நான் எனது கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுகிறேன். அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். இருந்தாலும் அது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கைகளில் தான் உள்ளது” என வார்னர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago