நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் 19 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ். அவர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆர்தர் ஆஷ் அரங்கத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நார்வே நாட்டின் காஸ்பர் ரூடுக்கு எதிராக விளையாடி இருந்தார். 6-4, 2-6, 7-6 (1), 6-3 என்ற செட் கணக்கில் இறுதிப் போட்டியை அவர் வென்றார். இதன் மூலம் சர்வதேச அளவில் ஆடவர் டென்னிஸ் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
1973 முதல் இதுவரையிலான ATP தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள மிக இளம் வயது வீரர் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளார் கார்லோஸ் அல்கராஸ். கடந்த 2020 முதல் நடால், ஜோகோவிச், மெத்வதேவ் மற்றும் அல்கராஸ் ஆகியோர் டென்னிஸ் ரேங்கிங் பிரிவில் முதலிடத்தில் இருந்துள்ளனர்.
ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதும் டென்னிஸ் கோர்ட்டில் களத்தில் விழுந்து தனது கைகளால் முகத்தை மூடிக்கொண்டு தரையில் புரண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதோடு எதிரில் இருந்து ரூடையும் கட்டி அணைத்து மகிழ்ந்தார் அவர்.
» ஆசிய கோப்பையை வென்ற இலங்கை: கொழும்பு நகர வீதிகளில் கொண்டாடிய மக்கள்
» 2047-க்குள் உலக வளர்ச்சியை இயக்கும் சக்தியாக இந்தியா மாறும்: பியூஷ் கோயல்
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Have a curtain call, Carlos Alcaraz! <a href="https://t.co/EIQIWU6SlR">pic.twitter.com/EIQIWU6SlR</a></p>— US Open Tennis (@usopen) <a href="https://twitter.com/usopen/status/1569109220221661184?ref_src=twsrc%5Etfw">September 11, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago