அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் 5-ம் நிலைவீராங்கனையும், துனிசியா நாட்டைச் சேர்ந்தவருமான ஆன்ஸ்ஜபேரும், போலந்து வீராங்கனையான இகா ஸ்வ்யாடெக்கும் மோதினர்.

இதில் இகா ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஜபேரை வீழ்த்தினார். இதன்மூலம் 2022-ம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் மகளிர் பிரிவு பட்டத்தைக் கைப்பற்றினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் வெல்லும் முதலாவது பட்டமாகும் இது. இதற்கு முன்பு அவர் பிரெஞ்சு ஓபனில் 2 முறை (2020, 2022) பட்டம் வென்றிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்