சென்னை ஓபன்: அங்கிதா, கர்மான் கவுருக்கு கடினமான முதல் சுற்று

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றில் எந்தெந்த வீராங்கனைகள் யாருடன் மோதுவார்கள் என்பதற்கான தேர்வு குலுக்கல் முறையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையும் உலகத் தரவரிசையில் 139-வது இடத்தில் உள்ளவருமான அங்கிதா ரெய்னா, 85-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் தட்ஜானா மரியாவுடன் மோதுகிறார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் தொடரில் தட்ஜானா மரியா அரை இறுதி சுற்று வரை முன்னேறியிருந்தார்.

இந்தியாவின் 2-ம் நிலை வீராங்கனையும் உலகத் தரவரிசையில் 365-வது இடத்தில் உள்ளவருமான கர்மான் கவுர் தண்டி, உலகத் தரவரிசையில் 111-வதுஇடத்தில் உள்ள பிரான்ஸின் சிலோயி பாக்கெட்டுடன்மோதுகிறார். 17-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் கரோலின் கார்சியா, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் ஆகியோர் இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளதால் 29-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அலிசன்ரிஸ்கி மீது எதிர்பார்ப்பு உள்ளது. அவர் தனது முதல்சுற்றில் ரஷ்யாவின் அனஸ்டசியா கசனவோவுடன் மோதுகிறார். வைல்டு கார்டு வீராங்கனையான கனடாவின் யூஜெனி பவுச்சார்ட் தனது முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ஜோனா ஜூகரை சந்திக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்