அமெரிக்க ஓபன் டென்னிஸ் - 5 மணி நேரத்துக்கும் மேல் போராடி வெற்றி பெற்றார் கார்லோஸ் அல்கராஸ்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 5 மணி நேரம் 15 நிமிடங்கள் போராடி ஜன்னிக் சின்னரை தோற்கடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் அரை இறுதிக்குள் நுழைந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில்3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ்அல்கராஸ், 11-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னரை எதிர்த்து விளையாடினார். 5 மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் 6-3, 6-7 (7-9), 6-7 (0-7), 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டம் அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.50 மணிக்கு முடிவடைந்தது. இதன் மூலம் அல்கராஸ் – ஜன்னிக் சின்னர் மோதிய ஆட்டம் அமெரிக்க ஓபனின் 141 வருட வரலாற்றில் தாமதமாக முடிவடைந்த ஆட்டம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 1993, 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் தாமதமாக அதிகாலை 2.26 மணிக்கு போட்டி நிறைவடைந்துள்ளது.

இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற 4-வதுசுற்று ஆட்டத்தில் அல்கராஸ், குரோஷியாவின் மரின் சிலிச்சை சுமார் 4 மணி நேரம் போராடி தோற்கடித்திருந்தார். 5 செட்கள் நடைபெற்ற இந்த ஆட்டம் அதிகாலை 2.23 மணிக்குதான் முடிவடைந்திருந்தது.

19 வயதான அல்கராஸ் அரை இறுதி சுற்றில் 22-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோவை எதிர்கொள்கிறார். 4-வது சுற்றில் ரபேல் நடாலை தோற்கடித்து அசத்தியிருந்த பிரான்சிஸ் தியாஃபோ கால் இறுதி சுற்றில் 9-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார். 2 மணி நேரம் 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரான்சிஸ் தியாஃபோ 7-6 (7-3), 7-6 (7-0), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். கிராண்ட் ஸ்லாம் அரை இறுதிக்கு பிரான்சிஸ் தியாஃபோ தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

இகா ஸ்வியாடெக்: மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீராங்கனையும் பிரெஞ்சுஓபன் சாம்பியனுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், 8-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுடன் மோதினார். ஒரு மணி நேரம் 53 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஸ்வியாடெக் அரை இறுதிக்கு முன்னேறுவது இது 3-வது முறையாகும். 21 வயதான இகா ஸ்வியாடெக் அரை இறுதியில், 6-ம் நிலை வீராங்கனையான பெல்லாரஸின் அரினா சபலெங்காவுடன் மோதுகிறார். அரினா சபலெங்கா கால் இறுதி சுற்றில் ) 6-1, 7-6(7-4) என்ற செட் கணக்கில் 22-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை தோற்கடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்