தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

By செய்திப்பிரிவு

காத்மாண்டு: தெற்காசிய கால்பந்து சம்மேளன (எஸ்ஏஎஃப்எஃப்) கால்பந்துப் போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தானை வீழ்த்தியது.

தெற்காசிய கால்பந்து சம்மேளன கால்பந்து போட்டி நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்று வருகிறது. காத்மாண்டுவில் உள்ள தசரத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியினர் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தினர்.

இந்திய அணி வீராங்கனைகள் டாங்மேய் கிரேஸ், சவும்யா ககுலோத் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் மேரியா ஜமீல் கான், சேம் சைட் கோலடித்தார்.

கோலடிக்க பாகிஸ்தான் வீராங்கனைகள் தீவிர முயற்சி செய்தபோது அதை இந்திய வீராங்கனைகள் வெற்றிகரமாக தடுத்தனர்.

இதையடுத்து இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் எளிதில் வெற்றி கண்டது. இந்திய அணி தனது லீக் ஆட்டத்தில் மாலத்தீவுகள் அணியை வரும் 10-ம் தேதி சந்திக்கவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்