துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்தில் உள்ளார்.
டி20 தரவரிசையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். 2-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அஸமும், 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் எய்டன் மார்க்ரமும் உள்ளனர். இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 775 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 13-வது இடத்திலும், விராட் கோலி 29-வது இடத்திலும் உள்ளனர். பவுலிங் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹசில்வுட் 792 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஆல்-ரவுண்டர் பிரிவில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 256 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) 2-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 163 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago