நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவன் கான்வே 46, கேப்டன் கேன் வில்லியம்சன் 45, டாம் லேதம் 43, டேரில் மிட்செல் 26 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் கிளென் மேக்ஸ்வெல் 4, ஜோஸ் ஹேசில்வுட் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 233 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் 44 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. ஆரோன் பின்ச் 5, ஸ்டீவ் ஸ்மித் 1, மார்னஸ் லபுஷேன் 0, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 5, டேவிட் வார்னர் 20 ரன்களில் நடையை கட்டினர்.
6-வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் காரே, கேமரூன் கிரீன் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அலெக்ஸ் காரே 99 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.
» இலங்கைக்கு எதிராக இந்தியா தோல்வி | "மிஸ் யூ தோனி" என ரியாக்ட் செய்த ரசிகர்கள்
» IND vs SL | 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி: தொடரில் இருந்து வெளியேறும் இந்தியா?
இதன் பின்னர் களமிறங்கிய கிளென் மேக்ஸ் வெல் 2, மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னில் வெளியேறினர். எனினும் ஆடம் ஸம்பா உறுதுணையுடன் கேமரூன் கிரீன் 92 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாச ஆஸ்திரேலிய அணி 45 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆடம் ஸம்பா 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago