தினேஷ் கார்த்திக்கை மிஸ் செய்கிறதா இந்திய அணி? - வல்லுனர்களின் கருத்து

By எல்லுச்சாமி கார்த்திக்

நடப்பு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். இருந்தாலும் முதல் இரண்டு போட்டியில் மட்டுமே அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், அவரை இந்திய அணி மிஸ் செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது குறித்து பார்ப்போம்.

தினேஷ் கார்த்திக் டெத் ஓவர்களில் மிகவும் அற்புதமாக அண்மைய நாட்களாக பேட் செய்து வருகிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 139.95. டெத் ஓவர்களில் வேகப்பந்து வீச்சை துவம்சம் செய்யும் வல்லமை கொண்டவர். அசத்தலான ஃபார்ம் மற்றும் அனுபவமும் பெற்றுள்ள வீரர். அவரது ரோலில் இந்திய அணியும் தெளிவான திட்டம் வைத்திருந்ததை போல தான் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் அவரது ரோலில் ஆடும் லெவனில் விளையாட இடம் பிடித்த வீரர்கள் அந்த பணியை சரிவர செய்யவில்லை. அதன் காரணமாக எதிர்பார்த்த ரன்களை இந்திய அணியால் முதலில் பேட் செய்து பெற முடியவில்லை. டிகே அணியில் இல்லாததற்கு காரணம் ஜடேஜா காயமடைந்தது எனவும் சொல்லப்படுகிறது.

இதற்கு உதாரணமாக இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான சூப்பர் 4 போட்டியை சொல்லலாம். ரோகித் - சூர்யகுமார் யாதவ் இடையே 97 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைந்தது. இருந்தும் அங்கிருந்து ரன் குவிப்பை தொடர தவறினர் இந்திய பேட்ஸ்மேன்கள். இங்குதான் தினேஷ் கார்த்திக்கை இந்தியா மிஸ் செய்வது தெளிவாக தெரிகிறது.

இன்சமாம் - முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்

“இந்திய கிரிக்கெட் அறிவித்த போது அதை கண்டு நான் பீதி அடைந்தேன். ஆனால் இந்திய அணியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை பார்க்கும் போது அவர்கள் அழுத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. என்னை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக் ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் ஆடும் லெவனில் தனது வாய்ப்பை இழந்துள்ளதாகவே பார்க்கிறேன்” என சொல்லியுள்ளார்.

கிரண் மோர் - முன்னாள் இந்திய வீரர்

“டிகே தன்னை ஒரு ஃபினிஷர் என நிரூபித்துள்ளார். தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்காதது நியாயம் இல்லை. வலது - இடது பேட்டிங் காம்பினேஷனுக்காக வேண்டி பந்தி ஆடும் லெவனில் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

ராபின் உத்தப்பா - முன்னாள் இந்திய வீரர்

“தினேஷ் கார்த்திக் ஆடும் லெவனில் விளையாடி இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அவரை அவர் ரோலில் விளையாட செய்ய வேண்டும். அது அவசியம். ரிஷப் விளையாடும் நம்பர் 5 பேட்ஸ்மேன் ரோலில் தீபக் ஹுடாவை விளையாட செய்யலாம். ஏனெனில் டாப் 4 பேட்ஸ்மேனாக தான் ரிஷப் டி20 கிரிக்கெட்டில் அற்புதமாக விளையாடி உள்ளார். இப்போதைக்கு இந்திய அணியில் டாப் 4 இடத்தில் விளையாட அவர் தேவையில்லை என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய ரோகித் சர்மா தங்களது பரிசோதனை முயற்சி இதிலும் தொடரும் என தெரிவித்திருந்தார். அந்த திட்டத்தின்படியே இந்திய அணி இப்போது செயல்படுகிறது என நம்புவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 mins ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்