அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் மேத்வதேவை வீழ்த்தினார் நிக் கிர்கியோஸ்

By செய்திப்பிரிவு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் கால் பதித்தார் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும்இந்தத் தொடரில் ஆடவர் ஒற்யைர் பிரிவு 4-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரஷ்யாவின்டேனியல் மேத்வதேவ், 23-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 53 நிமிடங்கள் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் டேனியல் மேத்வதேவை 7-6 (13-11), 3-6, 6-3, 6-2 என்றசெட் கணக்கில் தோற்கடித்தார் நிக் கிர்கியோஸ்.

வெற்றி குறித்து கிர்கியோஸ் கூறும்போது, “இது அற்புதமான ஆட்டமாகஅமைந்தது. நடப்பு சாம்பியனான மேத்வதேவுக்கு அதிக நெருக்கடி இருந்தது.ஆனால் கடந்த இரு மாதங்களாகவே நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறேன். அரங்கு நிறைந்த மக்கள் வெள்ளத்தில் விளையாடுவதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்” என்றார்.

மேத்வதேவ் கூறும்போது, “ஜோகோவிச், நடால் ஆகியோர் விளையாடும் மட்டத்தில் கிர்கியோஸ் விளையாடினார். இந்தத் தொடர் முழுவதும் அவர், இதேபோன்று விளையாடினால் பட்டம் வெல்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன” என்றார்.

நிக் கிர்கியோஸ் கால் இறுதி சுற்றில், 31-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன்கச்சனோவை எதிர்த்து விளையாடுகிறார். கரேன் கச்சனோவ் 4-வது சுற்றில் 4-6, 6-3, 6-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் 12-ம் நிலை வீரரான கரேனோபஸ்டாவை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் நடைபெற்றது.

5-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 6-1, 6-2, 6-7 (4-7), 6-2 என்றசெட் கணக்கில் பிரான்ஸின் கோரெண்டின் மவுடெட்டையும், 13-ம் நிலை வீரரானஇத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 3-6, 7-6 (7-2), 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினாவையும் தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில்12-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ ஃகாப் 7-5, 7-5 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜாங் ஹுவாய்-ஐதோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க ஓபனில் கோ கோ ஃகாப் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

17-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கார்சியா 6-4, 6-1 என்றநேர் செட்டில் 29-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கிஅமிர்தராஜையும், 5-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் 7-6 (7-1), 6-4 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவையும், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்லஜ்னோவிச் 7-6 (10-8), 6-1 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சோனோவாவையும் தோற்கடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்