புதுடெல்லிஇந்திய கிரிக்கெட் அணி தற்போதுதுபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர்- 4 சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங், பாகிஸ்தான் வீரர் ஒருவரின்கேட்ச்சை பிடிக்காமல் தவறவிட்டார். இதுவே இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைய காரணம் என தெரிவித்து, சமூக ஊடகத்தில் சிலர் அவரை, கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், அர்ஷ்தீப் சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில், இந்தியாஎன்ற வார்த்தையை நீக்கிவிட்டு, காலிஸ்தான் என்ற வார்த்தையை பதிவு செய்யப்படாத பயன்பாட்டாளர் ஒருவர் இணைத்து உள்ளார். இது பெரும்சர்ச்சையைக் கிளப்பியது. இருப்பினும், 15 நிமிட இடைவெளியில் இந்தப் பதிவுகள் பின்னர் மாற்றி சரிசெய்யப்பட்டன.
இந்நிலையில், அர்ஷ்தீப் சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில், அவரை பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்தி தகவல் வெளியிட்டு போலியான செய்தியை எப்படி பதிவிட முடிந்தது என்றும், இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்றும் விக்கிப்பீடியா அதிகாரிகளுக்கு மத்திய அரசு சார்பில்சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago