சிட்டகாங் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் வங்கதேசத்தை 248 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 228/8 என்று மொத்தம் 273 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 2-வது இன்னிங்ஸில் 62/5 என்று கடுமையாகப் போராடிய இங்கிலாந்தை தனது 85 ரன்கள் இன்னிங்ஸினால் ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தி இங்கிலாந்தை மீட்டார். இவரும், ஜானி பேர்ஸ்டோவும் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக பேட்டிங்கிற்கு பகைமையான பிட்சில் 127 ரன்களைச் சேர்த்தது இந்த டெஸ்ட் போட்டியின் திருப்பு முனை அம்சமாகும். பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களை தன் இன்னிங்சில் அடித்தார்.
இருவரும் இன்றைய தினத்தின் கடைசி மணி நேரத்தில் ஆட்டமிழந்தாலும் இங்கிலாந்துக்கு வெற்றி நம்பிக்கை அளிக்கும் ஒரு முன்னிலையை உறுதி செய்தனர். ஷாகிப் அல் ஹசன் அருமையாக வீசி 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
221/5 என்று இன்று காலை தொடங்கிய வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன் (31), 2-வது பந்திலேயே மொயின் அலி (3/75) பந்தை மேலேறி வந்து விளாச முயன்று ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார்.
அடில் ரஷித் (2/58) இரவுக்காவலன் ஷபியுல் இஸ்லாம் (2) விக்கெட்டை வீழ்த்த பிறகு ஸ்டோக்ஸ் இன்னிங்ஸை முடித்து வைத்தார். மெஹதி ஹசனை ஸ்டோக்ஸ் எல்.பி.செய்தார். சபிர் ரஹ்மான் (19) அலிஸ்டர் குக்கின் கேட்சிற்கு ஆட்டமிழந்தார். பிறகு கடைசி விக்கெட்டாக கம்ருல் இஸ்லாம், ஸ்டோக்ஸ் பந்தை ஆடாமல் விட்டு பவுல்டு ஆக ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வங்கதேசம் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
45 ரன்கள் என்ற எதிர்பாராத முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து தொடக்க வீரர்கள் அலிஸ்டர் குக், டக்கெட் ஆகியோர் தொடக்கத்திலேயே இருமுனைகளிலும் ஸ்பின் சோதனையை எதிர்கொள்ள நேரிட்டதில் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டனர். அலிஸ்டர் குக் மெஹதி ஹசன் பந்தை எட்ஜ் செய்ய மஹமுதுல்லா கேட்ச். குக் 12 ரன்களில் அதிர்ச்சி வெளியேற்றம் கண்டார். ஜோ ரூட் 1 ரன் எடுத்து மேலும் அதிர்ச்சிகரமாக ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆன பந்தை முன் கூட்டியே ஸ்வீப் செய்ய தயாராகி ஆடியதால் ஷாகிபிடம் எல்.பி.ஆகி வெளியேறினார்.
உணவு இடைவேளைக்கு முன்னதாக டக்கெட் (15), ஷாகிப் பந்தை ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 29/3 என்று தடுமாறியது. உணவு இடைவேளைக்குப் பிறகு உடனேயே கேரி பாலன்ஸ் (9) தைஜுல் இஸ்லாம் பந்தை ஸ்வீப் செய்து இம்ருல் கயேஸிடம் லெக் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதே ஸ்வீப் ஷாட்தான் ஷாகிப் பந்தில் மொயின் அலியையும் காவு வாங்கியது. முஷ்பிகுர் ரஹிம் நன்றாக அதனைப் பிடித்தார். 62/5 என்ற நிலையில் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ இணைந்தனர்.
இருவரும் நிதானமாக ஆடி தேநீர் இடைவேளையின் போது மேலும் சேதமில்லாமல் 108/5 என்று ஸ்கோரை உயர்த்தினர். அதன் பிறகு வங்கதேச பவுலர்கள் நெருக்கடியை ஏற்படுத்தவில்லை, இதனால் ஸ்டோக்ஸ் தனது அரைசதத்தை மிட்விக்கெட்டில் அடித்த புல்ஷாட் சிக்ஸ் மூலம் கிராண்டாக எட்டினார்.
உறுதுணையாக ஆடிய விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ ஒரு காலண்டர் ஆண்டில் விக்கெட் கீப்பராக அதிக ரன்களை எட்டிய சாதனையை நிகழ்த்தினார். இவர் 47 ரன்களில் இருந்த போது வங்கதேச சீம் பவுலர் கம்ருல் பந்தில் பிளேய்ட் ஆன் ஆனார். ஸ்டோக்ஸ் ஸ்வீப் ஷாட்டிற்கு ஷாகிபிடம் சற்று நேரம் கழித்து வெளியேறினார். ரஷீத்தையும் ஷாகிப் எல்.பியில் வீழ்த்தினார். ஆட்ட முடிவில் கிறிஸ் வோக்ஸ் 11 ரன்களுடனும் பிராட் 10 ரன்களுடனும் களத்தில் இருக்க இங்கிலாந்து 228/8 என்று 273 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஷாகிப் அல் ஹசன் 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago