ஆசிய கோப்பை | த்ரில் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை தகுதி

By செய்திப்பிரிவு

ஆசிய கோப்பை டி20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இரு அணிகளும் தங்களின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்த இன்றைய போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு எந்த வீரரும் 50+ ஸ்கோர் எடுக்காவிட்டால் மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் அஃபிஃப் ஹொசைன் ஆகியோரின் உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஃபிஃப் ஹொசைன் 39 ரன்களும், மெஹிதி ஹசன் மிராஸ் 38 ரன்களும் எடுத்திருந்தனர்.

184 ரன்கள் இலக்கை நோக்கிய இலங்கையின் இன்னிங்ஸில் குஷல் மென்டிஸ் மற்றும் கேப்டன் தசுன் ஷானுங்கா ஆட்டத்தால் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது அந்த அணி. ஓப்பனிங் வீரராக களமிறங்கிய குஷல் மென்டிஸ் 60 ரன்கள் சேர்ந்த்திருந்தார். தசுன் ஷானுங்கா 45 ரன்கள் எடுத்திருந்தார். இருவர் இருவரும் அவுட் ஆன பிறகு இறுதி ஓவர்களில் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. எனினும், பவுலர் அசித்த பெர்னாண்டோ மற்றும் ஷமிகா கருணாரத்னே இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் குரூப் 4 சுற்றுக்கு மூன்றாவது அணியாக இலங்கை தகுதிபெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்