துபாய்: இந்திய அணியுடனான போட்டிக்கு பிறகு ஹாங்காங் கிரிக்கெட் வீரரான கின்சித் ஷா (Kinchit Shah) தனது தோழியிடம் தனது காதலை மைதானத்திலேயே வெளிப்படுத்தியுள்ளார். அவரது முயற்சி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதோடு அவரது தோழி அவரின் காதலை ஏற்றாரா என்பதை பார்ப்போம்.
26 வயதான அவர் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 30 ரன்களை சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இருந்தும் 18-வது ஓவரில் அவர் அவுட்டனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அவர் ஹாங்காங் அணிக்காக 43 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 633 ரன்கள் எடுத்துள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிராக கடந்த 2019 வாக்கில் 79 ரன்கள் சேர்த்திருந்தார். அது டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அவரது அதிகபட்ச ரன்களாக உள்ளது. 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்த போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாங்காங் அணி இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவிய நிலையில் மைதானத்தில் இருந்த தனது தோழியிடம் காதலை கவித்துவமாக வெளிப்படுத்தியுள்ளார்.
டிரஸ்ஸிங் ரூமில் இருந்து வெளிவரும் கின்சித், தனது தோழியிடம் சென்று பாக்கெட்டில் உள்ள மோதிரத்தை எடுத்து, அவருக்கு முன்னாள் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்துகிறார். சில நொடிகள் தாமதித்தாலும் அவரது தோழி காதலை ஏற்றுக் கொண்டார்.
» ராதே ஷ்யாம் டு லைகர்: 2022-ல் படுதோல்வியடைந்த பான் இந்தியா படங்கள்
» “8 வழிச்சாலை திட்ட விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்” - வானதி சீனிவாசன்
கிரிக்கெட் மைதானத்தில் இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சஹார், ஐபிஎல் 2021 சீசனின் போது இதே போல காதலை வெளிப்படுத்தி இருந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago