துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஹாங்காங்குடன் மோதுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். அதேவேளையில் பேட்டிங்கில் ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா பொறுப்புடன் செயல்பட்டு அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றிருந்தனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இன்றைய ஆட்டத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். இருப்பினும் ஹாங்காங் அணியின் பந்து வீச்சு எந்த வகையில் இருக்கும் என்பது புதிராகவே உள்ளது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும். அநேகமாக இன்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறக்கப்படக்கூடும். அஸ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
» 'ஒருமுறை என் மரணம் பற்றிய வதந்தி பரவியது' - ரவீந்திர ஜடேஜா
» ஆசிய கோப்பை | 2-வது வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்
ஹாங்காங் அணியானது கரோனா பெருந்தொற்று காலத்தால் 2020-ம் ஆண்டு மார்ச் 6 முதல் 2022-ம் ஆண்டு ஜூலை 11 வரை கிரிக்கெட்டில் இருந்து விலகியே இருந்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதி சுற்றில் பங்கேற்கும் விதமக அந்த அணி கடந்த மாதம்தான் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளது. இந்த காலத்தில் ஹாங்காங் அணி இரு டி 20 உலகக் கோப்பைகளை தவறவிட்டது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடுவதை அரிய வாய்ப்பாகவே ஹாங்காங் அணி கருதுகிறது. 2018-ம் ஆண்டு ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாங்காங் வெற்றிக்கு அருகே நெருங்கியது. 286 ரன்கள் இலக்கை விரட்டிய நிலையில் 26 ரன்கள் வித்தியாசத்தில்தான் ஹாங்காங் தோல்வி கண்டிருந்தது. 115 பந்துகளில் 92 ரன்கள் விளாசியிருந்த நிஜாகத் கான் தலைமையில்தான் ஹாங்காங் தற்போது களமிறங்க உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago