நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் உக்ரைனைச் சேர்ந்த தரியா ஸ்னிகுர், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப்பை தோற்கடித்தார். அதேவேளையில் ஆடவர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நேற்று முன்தினம் இரவு நியூயார்க்கில் தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், தகுதி நிலை வீரரான கொலம்பியாவின் டேனியல் ஹலனை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டேனியல் ஹலன் 6-0, 6-1, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முதல் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 6-2, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்டீபன் கோஸ்லோவையும், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 7-5, 6-3,6-3 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவையும் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர். 10-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் ஆகியோர் தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் 7-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், தகுதிநிலை வீராங்கனையான உக்ரைனின் தரியா ஸ்னிகுர்ரை எதிர்த்து விளையாடினார். இதில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலப்பை 6-2, 0-6, 6-4 என்ற செட்டில் அதிர்ச்சியளிக்கும் வகையில் தோற்கடித்தார் 20 வயதான தரியா ஸ்னிகுர்.
» 'ஒருமுறை என் மரணம் பற்றிய வதந்தி பரவியது' - ரவீந்திர ஜடேஜா
» ஆசிய கோப்பை | 2-வது வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்
ஹாலப்பை வீழ்த்தியதும் தரியாஸ்னிகுர் ஆனந்த கண்ணீர் சிந்தினார். பின்னர் அவர் தான் அணிந்திருந்த உடையில் இருந்த உக்ரைன் ரிப்பனை சுற்றி கைகளால் இதய வடிவத்தை உருவாக்கி ரசிகர்களை நோக்கி காண்பித்தார். வெற்றிகுறித்து தரியா ஸ்னிகுர் கூறும்போது, “நான்மிகவும் பதற்றமாக இருக்கிறேன். என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சித்தேன். உக்ரைனுக்காகவும், என் குடும்பத்திற்காகவும், அனைவருக்கும் நன்றி சொல்லவிரும்புகிறேன்” என்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் மாண்டினீக்ரோவின் டாங்கா கோவினிக்கை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தை 23 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் கண்டுகளித்தனர். 40 வயதான செரீனா இந்தத் தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago