சாதித்தது போன்ற உணர்வை தருகிறது - மனம் திறக்கும் ஹர்திக் பாண்டியா

By செய்திப்பிரிவு

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. 148 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 2 பந்துகளை மீதம் வைத்து 19.4 ஓவர்களில் வெற்றி கண்டது. ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்களும், ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தது.

முகமது நவாஸ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்களே தேவையாக இருந்த நிலையில் முதல் பந்தில் ஜடேஜா போல்டானார். ஒரு கட்டத்தில் 3 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் லாங்-ஆன் திசையில் சிக்ஸர் விளாசி வெற்றியை வசப்படுத்தினார் ஹர்திக் பாண்டியா. முன்னதாக பந்து வீச்சிலும் ஹர்திக் பாண்டியா அபார திறனை வெளிப்படுத்தியிருந்தார். 4 ஓவர்களை வீசிய அவர் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார்.

இதே மைதானத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டு, களத்தில் அவரால் அசையக்கூட முடியாத நிலையில் ஸ்டெரச்சரில் வைத்து அழைத்துச் சென்றனர். இந்த காயம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியிருந்தது. இந்த காயத்தில் சுமார் 3 வருடங்கள் ஹர்திக் பாண்டியா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து அதே மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியைவெற்றியை நோக்கி பயணிக்க செய்துள்ளார்.

போட்டி முடிவடைந்ததும் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: இந்த வெற்றியைப் பெற்றதில் மகிழ்ச்சி, ஏனெனில் இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு அணியாக எங்களுக்கு சவால் விடப்பட்டது. ஜடேஜா விளையாடிய விதம் பிடித்திருந்தது. 2018 ஆசியக் கோப்பை போட்டி சம்பவத்தை நான் மறக்கவில்லை. இந்த மைதானத்தில் ஸ்டெரச்சரில் கொண்டு சென்றார்கள். அதே தொடர், அதே எதிரணி, அதே ஓய்வறை. அன்று நடந்த நிகழ்ச்சிகளை மனதில் அசை போட்டுப் பார்க்கிறேன். இவை எல்லாம் நடைபெற்ற பிறகும் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது சாதித்ததாக உணர்கிறேன்.

ஏனெனில் மீண்டு வருவதற்கு நான் என்ன செய்தேன், எப்படி வாய்ப்பு பெற்றேன் என்பது அழகான பயணம். நான் முழு உடற்தகுதியுடன் அணிக்கு திரும்பியதில் இந்திய அணியின் முன்னாள் உடற்பயிற்சி நிபுணர் நிதின் படேல் மற்றும் தற்போதைய வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களை பாராட்டியாக வேண்டும்.

இதுபோன்ற வகையில் இலக்கை துரத்தும் போது எப்போதுமே ஆட்டத்தை ஒவ்வொரு ஓவராகத் தான் திட்டமிட வேண்டும். பாகிஸ்தான் அணியில் கடைசி கட்டத்தில் பந்து வீசுவதற்கு ஒரு இளம் பந்து வீச்சாளர் (நசீம் ஷா அல்லது ஷாநவாஸ் தஹானி) மற்றும் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் (முகமது நவாஸ்) இருப்பதை அறிந்திருந்தேன். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் 15 ரன்கள் தேவைப்பட்டிருந்தாலும் அடித்திருப்பேன். கடைசி ஓவரில் என்னைவிட பந்து வீச்சாளர் அதிக அழுத்தத்தில் உள்ளார் என்பது தெரியும்.

ஏழு ரன்கள் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை. சூழ்நிலை என்னவாக இருந்தாலும், பந்தை அடிக்க வேண்டும் அவ்வளவுதான். பந்துவீச்சை பொறுத்தவரையில் சூழ்நிலை
களை மதிப்பிடுவதும், நமது பலங்களை பயன்படுத்துவதும் முக்கியம். ஷார்ட் மற்றும் கடினமான நீளத்தில் பந்து வீசுவதே எனது பலம். பேட்ஸ்மேன்களை நன்றாக பயன்படுத்தச் செய்து அவர்களை தவறு செய்ய வைக்க வேண்டும். எங்கள் செயல்முறை இந்த போட்டிக்கு மட்டுமல்ல, உலகக் கோப்பைக்கானது. இதுபோன்ற ஒரு சூழ்நிலை மீண்டும் வந்தால், நிச்சயமாக நாங்கள் இந்த போட்டியை நினைவில் வைத்துக்கொள்வோம், உத்வேகம் பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

வினைதேடிக் கொண்ட பாகிஸ்தான்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீசுவதற்கு பாகிஸ்தான் அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டது. ஐசிசி விதிகளின்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் கடைசி ஓவரை வீச
ஆரம்பித்திருக்க வேண்டும். இதை பாகிஸ்தான் அணி செய்யத் தவறியதால் இதற்கு தண்டனையாக கடைசி 3 ஓவர்களில் எல்லைக்கோட்டுக்கு அருகே 5 பீல்டர்களுக்கு பதிலாக 4 பேரை மட்டுமே நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதை ஜடேஜா, ஹர்திக் பாண்டியா பயன்படுத்திக் கொண்டனர். ஐசிசி-யின் இந்த விதி கடந்த ஜனவரி மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்