ஆடுகளத்தில் தான் சந்தித்த பின்னடைவு மற்றும் அதன் பிறகு அதே களத்தில் தனது கம்பேக்கை சுட்டிக்காட்டும் படங்களை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா. பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவரது அசத்தல் ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்தது.
பேட்டிங் மற்றும் பவுலிங் என ஆல் ரவுண்ட் பர்ஃபாமென்ஸ் கொடுக்க தான் தயார் என்பதை வெளிக்கொணரும் விதமாக அமைந்துள்ளது ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம். காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சரிவர பந்து வீச முடியாமல் அவதிப்பட்டு வந்தார் அவர். முழு உடல் தகுதியுடன் இல்லாம அணியில் இடம்பெற்று விளையாடி வந்த அவரை பலரும் விமர்சித்து வந்தனர். கிட்டத்தட்ட பல மாதங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் களத்திற்கு கம்பேக் கொடுத்தார்.
அண்மையில் அவர் தலைமை தாங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிதான் ஐபிஎல் 2022-ல் சாம்பியன் பட்டம் வென்றது. ஒரு ஆல் ரவுண்டராக அணிக்கு தேவையானதை அந்த தொடரில் டெலிவர் செய்தார் ஹர்திக். இப்போது அதை அப்படியே சர்வதேச கிரிக்கெட்டிலும் மடைமாற்றி உள்ளார். ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 4 ஓவர்கள் பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதோடு 17 பந்துகளில் 33 ரன்களையும் குவித்திருந்தார்.
» நட்சத்திரம் நகர்கிறது சிறப்புக் காட்சி - பா.ரஞ்சித்தை கட்டியணைத்து பாராட்டிய அனுராக் காஷ்யப்
இப்போது அவரை நோக்கி விமர்சித்த அனைவரும் ‘ஹர்திக்…ஹர்திக்…’ என போற்றி வருகின்றனர். அந்த அளவுக்கு அவரது ஆட்டம் உள்ளது. இந்த அசத்தல் ஆட்டம் ஆட அவரும் மனதளவில் தயாராக உள்ளார் என்பதை களத்தில் அவரது உடல் மொழி வெளிப்படுத்தியது. இக்கட்டான சூழலில் மிகவும் அமைதியாக இருந்தபடி ஆட்டத்தை வென்று கொடுத்தார்.
இப்போது அந்த உணர்வை தனது ட்வீட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். “The comeback is greater than the setback” என கேப்ஷன் கொடுத்துள்ளார். கடந்த 2018 ஆசிய கோப்பையின் போது காயமடைந்த காரணத்தால் களத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்ட படத்தையும், நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆட்டத்தை வென்று கொடுத்த படத்தையும் பகிர்ந்துள்ளார் அவர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago