இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 951 விக்கெட்களை சாய்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையே இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்று வந்த2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இந்தப் போட்டியின்போது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து 6 விக்கெட்களைசாய்த்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார். இதுவரை அவர்டெஸ்டில் 664, ஒருநாள் போட்டியில் 269, டி20 போட்டிகளில் 18 என மொத்தம் 951 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
இந்தப் பட்டியலில்இலங்கையின் முரளிதரன் (1347), ஆஸ்திரேலியாவின் வார்ன் (1001), இந்தியாவின் கும்ப்ளே (956) ஆகியோர் முதல்3 இடங்களில் உள்ளனர். முதல்3 இடங்களில் இவர்கள் இருந்தாலும் இவர்கள் அனை வரும் சுழல்பந்து வீச்சாளர்களே.
» ஆசிய கோப்பை | பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா - கொண்டாட்டத்தில் மக்கள்; வாழ்த்திய பிரதமர் மோடி
» "நான் பாத்துக்குறேன்" - கடைசி ஓவரில் சிக்ஸர் விளாசி தோனியை நினைவூட்டிய ஆட்ட நாயகன் ஹர்திக்
எனவே, அதிக விக்கெட்களைக் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடங்களில் மெக்ராத் (ஆஸி.), வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago