அபுதாபி: அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி சாம்பியன் பட்டம் வென்றார்.
அபுதாபியில் நடைபெற்ற இந்தத் தொடரில் 148 வீரர்கள் கலந்து கொண்டனர். 9 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 8 சுற்றுகளின் முடிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி, சீனாவின் வாங் ஹாவ், அமெரிக்காவின் ரே ராப்சன், நெதர்லாந்தின் வான் ஜோர்டன் ஆகியோர் தலா 5.5 புள்ளிகள் பெற்றிருந்தனர். இந்நிலையில் நேற்று கடைசி சுற்று ஆட்டம் நடைபெற்றது.
இதில் அர்ஜூன் எரிகைசி, ஸ்பெயின் கிராண்ட் மாஸ்டரான டேவிட் அன்டன் குய்ஜாரோவை எதிர்கொண்டார். இதில் அர்ஜூன் எரிகைசி 67-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
6 days ago