மான்செஸ்டர்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமிக்க புதிய சாதனையை படைத்துள்ளார் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சீனியர் பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சன். இப்போதெல்லாம் இவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் சாதனைகளாக அமைந்து வருகிறது. இப்போது அப்படி என்ன சாதனை அவர் படைத்துள்ளார் என பாப்போம்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து பார்க்கும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 40 வயதை கடந்தும் கிரிக்கெட்டின் அசல் ஃபார்மெட்டில் அசராமல் விளையாடி வருகிறார். இதுவரை மொத்தம் 174 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 659 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளராகவும் அவர் அறியப்படுகிறார். பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயங்கள் ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு அடியையும் களத்தில் கொஞ்சம் உஷாராக எடுத்து வைக்க வேண்டும். ஆண்டர்சன் இந்த காயங்களை எல்லாம் கடந்து தான் சாதனை படைத்துள்ளார். அதற்காக தன்னை தானே வருத்திக் கொண்டார். அதற்கான பலனையும் அவர் அறுவடை செய்து வருகிறார்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த நாட்டில் 100 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற புதிய மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் உலகில் இதற்கு முன்னர் இந்த சாதனையை எந்தவொரு வீரரும் எட்டியதில்லை. தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதில் ஒரு விக்கெட்டையும் அவர் கைப்பற்றி உள்ளார்.
சொந்த நாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களாக முன்னாள் இந்திய வீரர் சச்சின் (94 டெஸ்ட்) மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (91 டெஸ்ட்) ஆகியோர் ஆண்டர்சனுக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். விரைவில் இன்னும் சில சாதனைகளை ஆண்டர்சன் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago