உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் | 2-ம் நிலை வீரரை வீழ்த்தினார் பிரனாய்

By செய்திப்பிரிவு

டோக்கியோ: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், உலகின் 2-ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மொமோட்டாவை தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்பெயினின் லூயிஸ் பெனால் வரை எதிர்த்து விளையாடினார். 72 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான லக்சயா சென் 21-17, 21-10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

முதல் செட்டில் 3-4 என பின்தங்கியிருந்த லக்சயா சென் அதன் பின்னர் தொடர்ச்சியாக 6 புள்ளிகளை குவித்து 13-7 என முன்னிலை பெற்றார். அதில் இருந்து சீராக புள்ளிகள் பெற்ற லக்சயா சென் முதல் செட்டை வசப்படுத்தினார். 2-வது செட்டில் ஒரு கட்டத்தில் இருவரும் 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். ஆனால் அதன் பின்னர் 9 புள்ளிகள் முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென் எந்த ஒரு கட்டத்திலும் லூயிஸ் பெனால் வரை மீண்டுவர அனுமதிக்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் லக்சயா சென்.

காலிறுக்கு முந்தைய சுற்றில் லக்சயா சென், சகநாட்டைச் சேர்ந்த ஹெச்.எஸ்.பிரனாயுடன் மோதுகிறார். தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள பிரனாய், தனது 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கென்டோ மொமோட்டாவை எதிர்த்து விளையாடினார். இதில் பிரனாய் 21-17, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். கென்டோ மொமோட்டாவை, பிரனாய் தோற்கடிப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் அவருக்கு எதிராக 8 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் கூட பிரனாய் வெற்றி கண்டது இல்லை.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் 18-21, 17-21 என்ற நேர்செட்டில் உலகத் தரவரிசையில் 32-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாவோ ஜுன் பெங்கிடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 34 நிமிடங்களில் முடிவடைந்தது. தரவரிசையில் 12-வது இடம் வகிக்கும் ஸ்ரீகாந்த் முதல் செட்டை 12 நிமிடங்களிலேயே இழந்தார். 2-வது செட்டில் ஒரு கட்டத்தில் 16-14 என ஸ்ரீகாந்த் முன்னிலையில் இருந்தார். ஆனால் அதிகளவிலான தவறுகளை மேற்கொண்டதால் இந்த செட்டையும் இழக்க நேரிட்டது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன், துருவ் கபிலா ஜோடி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஜோடி 2-வது சுற்றில் 21-17, 21-16 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் கிம் அஸ்ட்ரப், ஆண்டர்ஸ் ஸ்காரப் ராஸ்முசென் ஜோடியை தோற்கடித்தது.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி 15-21, 10-21 என்ற நேர் செட்டில் சீனாவின் சென் கிங் சென், ஜியா யி ஃபேன் ஜோடியிடம் தோல்வியடைந்தது. ட்ரிஸா ஜாலி, புலேலா காயத்ரி ஜோடி மலேசிய ஜோடியிடம் வீழ்ந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்