துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் 93 இடங்கள் முன்னேறி 38-வது இடத்தை பிடித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேனான சுப்மன் கில். அவர் அண்மையில் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
22 வயதான கில், கடந்த 2019-ல் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானவர். இதுவரை 9 ஒருநாள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் 64, 43, 98*, 82*, 33 மற்றும் 130 (* நாட் அவுட்) என ரன்களை குவித்துள்ளார். அதன் மூலம் தரவரிசையில் தரமான முன்னேற்றத்தை கண்டுள்ளார்.
இதேபோல ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன் சிக்கந்தர் ரசாவும் 7 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய வீரர்களில் கோலி 5-வது இடத்திலும், ரோகித் 6-வது இடத்திலும், தவான் 12-வது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் 10 பவுலர்களில் பும்ரா 4-வது இடத்தில் உள்ளார். டாப் 10 ஆல்-ரவுண்டர்களில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago