ஒருநாள் போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்க பென் ஸ்டோக்ஸ் பரிந்துரை

By செய்திப்பிரிவு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை 50 ஓவர்களில் இருந்து 40 ஓவர்களாக குறைக்கலாம் என்று இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பரிந்துரைத்துள்ளார். அண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார் அவர்.

2019 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல உதவியவர் ஸ்டோக்ஸ். மொத்தம் 105 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2,924 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 31 வயதான அவர் ஓய்வை அறிவித்தபோது கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி அடைந்தது.

அதே நேரத்தில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர்கள் நடத்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அது ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த சூழலில் அது குறித்து பேசி உள்ளார் ஸ்டோக்ஸ்.

அவர் குறித்த ஆவணப்படம் வெளியாக உள்ள நிலையில் பேட்டி ஒன்றில் ஸ்டோக்ஸ் இதனை தெரிவித்துள்ளார். “உலகம் முழுவதும் சர்வதேச கிரிக்கெட்டை கடந்து பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகிறது. நான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன். அதே நேரத்தில் ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டை 50 ஓவர்களில் இருந்து 40 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக மாற்றலாம். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டின் மீது ஆர்வத்தை அதிகரிக்க செய்யலாம். ஐசிசி இதை பரிசீலிக்கலாம். இது எனது தனிப்பட்ட கருத்து” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஒருநாள் கிரிக்கெட்டை 40 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக மாற்றலாம் என சொல்லி இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்