உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுக்கல் -அன்டோரா அணிகள் பாரிஸ் நகரில் மோதின. இதில் போர்ச்சுக்கல் அணி 6-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனல்டோ 4 கோல்கள் அடித்து அசத்தினார். ஆட்டம் தொடங்கிய முதல் நான்கு நிமிடங்களுக்குள் அவர் இரு கோல்கள் அடித்து அன்டோரா அணியை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.
யுரோ உலகக் கோப்பை இறுதி ப்போட்டியில் காயம் அடைந்த ரொனால்டோ அதன் பின்னர் 3 மாதங்களுக்கு பிறகு களமிறங்கிய முதல் ஆட்டம் இதுதான். 31 வயதான ரொனால்டோ 73-வது விநாடியில் முதல் கோலை அடித்தார். அடுத்த இரண்டு நிமிடங்களில் 6 அடி தூரத்தில் இருந்து இரண்டாவது கோலை அடித்து மிரட்டினார்.
44-வது நிமிடத்தில் ஹன்சேலா ஒரு கோல் அடிக்க முதல் பாதியில் போர்ச்சுக்கல் 3-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 90 விநாடிகளில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார்.
தொடர்ந்து 68-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார் ரொனால்டோ. ஆட்டம் முடிவடைய 4 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் போர்ச்சுக்கல் அணியின் 6-வது கோலை அடித்தார் சில்வா. கடைசி வரை அன்டோரா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது. போர்ச்சுக்கல் அணி தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்திடம் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போதைய வெற்றியின் மூலம் 3 புள்ளிகளை பெற்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago