அரோனியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

By செய்திப்பிரிவு

மியாமி: எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைக்கான செஸ் தொடர் அமெரிக்காவின் மியாமிநகரில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, உலகின் 6-ம் நிலை வீரரான லேவோன் அரோனியனை எதிர்த்து விளையாடினார். இதில் 17 வயதான பிரக் ஞானந்தா 3-1 என்ற கணக்கில் அரோனியனை தோற்கடித்தார்.

இந்தத் தொடரில் பிரக்ஞானந்தாவுக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன், உலக சாம்பியனான நார்வேயின்மேக்னஸ் கார்ல்சனுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். கார்ல்சன் தனது 4-வது சுற்றில் சீனாவின் குவாங் லீம் லீயை வீழ்த்தினார்.

பிரக்ஞானந்தா முதல் சுற்றில் உலகின் முதல் நிலை ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவையும், 2-வது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியையும், 3-வது சுற்றில் ஹான்ஸ் நீமனையும் தோற்கடித்திருந்தார். 8 வீரர்கள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரில் இன்னும் 3 சுற்றுகள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்