இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வி

By செய்திப்பிரிவு

லார்ட்ஸ்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 45 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்கா2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட்கள்இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியதென் ஆப்பிரிக்க அணி 89.1 ஓவரில் 326 ரன்களுக்குஅனைத்து விக்கெட்களையும் இழந்தது. மார்கோஜேன்சன் 48, ரபாடா 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். அன்ரிச் நார்ட்ஜே 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

161 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 37.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் லீஸ் 35, ஸ்டூவர்ட் பிராடு 35 ரன்கள் எடுத்தனர். ஆலி போப் 5, ஜோ ரூட் 6, ஜானி பேர்ஸ்டோ 18, பென் ஸ்டோக்ஸ் 20 ரன்களில் நடையை கட்டினர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நார்ட்ஜ் 3 விக்கெட்களையும் ரபாடா, கேசவ் மகாராஜ், மார்கோ ஜேன்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE