ரசிகரின் செல்போனை உடைத்த ரொனால்டோ

By செய்திப்பிரிவு

லிவர்பூல்: ரசிகரின் செல்போனை உடைத்தது தொடர்பாக மான்செஸ்டர் யுனைட்டெடு கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் கடந்த மார்ச் 9-ம் தேதி மான்செஸ்டர் யுனைட்டெடு – எவர்டன் அணிகள் மோதின. இதில் மான் செஸ்டர் அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. போட்டி முடிவடைந்ததும் மான்செஸ்டர் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்டவீரர்கள் மைதானத்தில் இருந்துதிரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது 14 வயது சிறுவன் தனது செல்போனில்வீரர்களை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தான். இதைப்பார்த்த ரொனால்டோ சிறுவனின் கையை பலமாக தட்டிவிட்டார்.

இதில் செல்போன் கீழே விழுந்து உடைந்தது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து ரொனால்டோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் மான்செஸ்டர் அணி விளையாடும் அடுத்த போட்டியை நேரில் காண சிறுவனுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மெர்சிசைட் போலீஸார், கிறிஸ்டியானோ ரொனால்டோவை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ரொனால்டோவை காவல்துறையினர் எச்சரித்தனர். இத்துடன் இந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்