முதல் தோல்வியை சந்தித்தது நியூஸிலாந்து அணி

By செய்திப்பிரிவு

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

பார்படாஸில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 45.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 34, மைக்கேல் பிரேஸ்வெல் 31 ரன்கள் சேர்த்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அகேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

191 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 39 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள்எடுத்து வெற்றி பெற்றது. ஷமர்ப்ரூக்ஸ் 91 பந்துகளில், 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 79 ரன்களும் கேப்டன் நிக் கோலஸ் பூரன்28 ரன்களும் சேர்த்தனர். இந்தஜோடி 4-வது விக்கெட்டுக்கு 72ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தது.

5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணிசந்தித்த முதல் தோல்வி இதுவாகும். அதேவேளையில் இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக அடைந்த 9 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE