ஹராரே: இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இன்று பகல் 12.45 மணி அளவில் தொடங்குகிறது. ஆசிய கோப்பையை கருத்தில் கொண்டு விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கே.எல்.ராகுல் தலைமையில் ஜிம்பாப்வே தொடரை இந்திய அணி எதிர்கொள்கிறது. சமீபத்தில் ஜிம்பாப்வே அணி வங்கதேசத்துக்கு எதிரானஒருநாள் போட்டி மற்றும் டி 20 தொடரை வென்றிருந்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் வம்சாவளி வீரரான சிக்கந்தர் ராஸா இரு சதங்கள் விளாசியிருந்தார். சிக்கந்தர் ராஸாவுடன் இன்னசென்ட் கையா, கேப்டன் ரெஜிஸ் சாகப்வா ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
ஜிம்பாப்வே மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி இதுவரை 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 5-ல் ஜிம்பாப்வேயும், 19-ல் இந்தியாவும் வெற்றி கண்டுள்ளன. சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள கே.எல்.ராகுல் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago