உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டங் களில் பிரான்ஸ், போர்ச்சுக்கல் அணிகள் வெற்றிபெற்றன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2018-ம் ஆண்டு நடை பெற உள்ளன. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. இதில் ஆம்ஸ் டர்டாம் நகரில் நேற்று முன்தினம் நடந்த ‘ஏ’ பிரிவு தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து பிரான்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. பிரான்ஸ் அணிக்காக முன்னணி வீரர் பால் போக்பா கோல் அடித் தார்.
‘ஹெச்’ பிரிவில் நடந்த போட் டியில் பெல்ஜியம் அணி 6-0 என்ற கோல்கணக்கில் கிப்ரால் டர் அணியை வென்றது. இப்போட்டி யில் பெல்ஜியம் வீரர் பெண்டெக் 7 விநாடிகளில் கோல் அடித்து, சர்வதேச கால்பந்து போட்டியில் மிக விரைவாக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத் தார். இந்த வெற்றியின் மூலம் பெல்ஜியம் அணி ‘ஹெச்’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
பெல்ஜியத்தை போலவே போர்ச்சுக்கல் அணியும் 6-0 என்ற கோல் வித்தியாசத்தில் தகுதிச் சுற்றில் வெற்றிகண்டது. ‘பி’ பிரி வில் நடந்த போட்டியில் இந்த அணி ஃபரோர் ஐலண்ட் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் கோல் அடித்ததன் மூலம் 4 நாட்களில் 5-வது சர்வதேச கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்வீடன் அணி பல்கேரியாவை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago