அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அங்கீகாரம் தற்காலிக ரத்து: ஃபிஃபா நடவடிக்கை

By செய்திப்பிரிவு

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (AIFF) அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா FIFA ) தெரிவித்துள்ளது.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பில் மூன்றாம் தரப்பினர் தலையீடு என்பது ஃபிஃபா சட்டங்களை மீறுகிறது என்பதால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக இடைநீக்கம் செய்ய ஒருமனதாக முடிவு செய்துள்ளதுதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைநீக்கத்தால் நடப்பாண்டில் அக்டோபர் 11 முதல் - 30 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவிருந்த ஃபிஃபா U-17 மகளிர் உலகக் கோப்பை 2022 திட்டமிட்டபடி தற்போது இந்தியாவில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அதே வேளையில், அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகக் குழுவிற்கு உரிய முறையில் உறுப்பினர்கள், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் உடனடியாக இந்த இடைநீக்க உத்தரவு திரும்பப்பெறப்படும் என்று ஃபிஃபா தெரிவித்துள்ளது.

இது குறித்து ஃபிஃபா தனது அறிக்கையில் மேலும் கூறுகையில், இந்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்துடன் இதுதொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் விரைவில் தீர்வு எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் யு 17 போட்டி தொடர்பாகவும் கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்