75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் எழுதிய சிறப்புக் கட்டுரை...
வெற்றிகரமாக 109 கிலோகிராம் எடையைத் தூக்கி வெற்றி மணியை சாய்கோம் மீராபாய் சானு தட்டியபோது, அந்த அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது. சில அடிகள் பின்னோக்கி நகர்ந்த சானு தனது வழக்கமான புன்னகையுடன் பணிவாக ‘வணக்கம்’ என்றார். 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல் புதிய சாதனையையும் படைத்து அனைவரையும் திகைக்கச் செய்தார் சானு.
சங்கேத் சர்காரின் வெள்ளி மற்றும் பி.குருராஜாவின் வெண்கலத்தை அடுத்து தங்கம் வென்று, இந்தியாவின் கணக்கு தொடங்கியது.
பதினோரு நாட்களில், உற்சாகம் நிறைந்த மூச்சுத்துடிப்புடன் இந்த மாபெரும்நிகழ்வை ஒட்டுமொத்த தேசமும் கவனித்து வந்தது. ஒட்டுமொத்தமாகப் போட்டிநிறைவுற்றபோது 22 தங்கம், 16 வெள்ளி,23 வெண்கலம் உட்பட 61 பதக்கங்களை பெற்று வெற்றிகரமாகத் தாயகம் திரும்பியது இந்திய வீரர், வீராங்கனைகள் அடங்கிய குழு.
» ’ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியாவின் இருபெரும் சவால்கள்’ - பிரதமர் மோடி
» சுதந்திர தின விழா | புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்
வழக்கமான செயல்பாடு மட்டுமல்லாமல், மகளிர் அணியைச் சேர்ந்த நால்வர் லான் பவுல்ஸ் எனும் புது விளையாட்டிலும் கூட தங்கம் வென்று அசத்தியிருக்கின்றனர்.
ரூபா ராணி திர்கே, லவ்லி சவ்பே, பிங்கி சிங், நயன்மோனி சைகியா என்று இவ்விளையாட்டில் பங்கு பெற்ற நால்வருமே தொடக்கத்தில் வெவ்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டவர்கள். ஒருகாலத்தில் கபடி வீராங்கனையாக ரூபா இருந்தார், எடை தூக்கும் போட்டியில் நயன்மோனி ஈடுபட்டார், பிங்கி கிரிக்கெட் விளையாடியவர், லவ்லி தடகள வீராங்கனையாக இருந்தவர். இவர்கள் அனைவருமே இதுவரை எவரும் பயணிக்காத புதிய பாதையில் சென்று பெருமையை அடைந்திருக்கின்றனர்.
இருப்பினும், விளையாட்டில் பெண்களுக்கான பெருமை என்பது தனிப்பட்டதாக இல்லை. சாதி, இனம் அல்லது பாலினம் தாண்டி தனிப்பட்ட முறையிலும் தொழில்ரீதியிலும் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல்மிக்கதாக விளங்குகிறது விளையாட்டு.
விளையாட்டு என்பது அனைவருக்கும் வளர்ச்சி தரும் ஒரு வாகனமாக இருந்தாலும் கூட, குறிப்பாக பெண்களுக்குப்பல ஆண்டுகளாகப் பெருமளவில் உதவியுள்ளது. அவர்களது சுயமரியாதை, தைரியம், ஆணாதிக்கத் தடைகளையும் சமூக கறைகளையும் போக்கும் ஆற்றலையும் பெற உதவிகரமாக இருந்தது.
நமது மகளிர் அணியைச் சேர்ந்த வீராங்கனைகளில் பலர் கிராமப்புற, வளர்ச்சியடையாத பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. தங்களது தளராத முயற்சிகளால் தான், தங்களுக்கான மரியாதையையும் வருமானத்தையும் சம்பாதித்திருக்கின்றனர். ஆதலால், கூட்டுமுயற்சியில் நம் பெண்களுக்கு சிறப்பான உதவிகளை வழங்க வேண்டியுள்ளது; இதன் மூலமாக தாங்கள் விரும்பும் விளையாட்டுகளில் இளம் வயதிலேயே மிளிர்வதற்கான ஆதரவையும் உதவியையும் அவர்கள் பெறுவார்கள்.
வெளிச்சம், நம்பிக்கை, சாதனைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான பெண்களை ஒரு படி முன்னேற்றத் தூண்டும்விதமாக சானு, நிகத் அல்லது சிந்துவின்வெற்றி அமைந்துள்ளது எனச் சொல்லலாம். எனவே, எதிர்காலத்தில் சிறந்த சமூகமாகவும் தேசமாகவும் நாம் வளர நமது பெண்கள் விளையாட்டு மூலமாக உயர்வை அடைய வேண்டும்.
ஏனென்றால், ஒவ்வொருமுறையும் ஒரு பந்தை உதைக்கும்போது அவர்களிடம் கட்டுப்படுவது வெறும்பந்து மட்டுமல்ல அதனோடு இணைந்தவையும் தான். ஒவ்வொரு முறையும் வெற்றி மணியை உயர்த்தும்போது அவர்களது வளம் மட்டும் உயர்வதில்லை; அதேநேரத்தில், அவர்கள் எதிர்கொண்ட அனைத்து தடைகளும் முன்னதாகவே கீழே விழுந்து நொறுங்குகின்றன.
கூட்டு முயற்சியில் நம் பெண்களுக்கு சிறப்பான உதவிகளை வழங்க வேண்டியுள்ளது; இதன் மூலமாக தாங்கள் விரும்பும் விளையாட்டுகளில் இளம் வயதிலேயே மிளிர்வதற்கான ஆதரவையும் உதவியையும் அவர்கள் பெறுவார்கள்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
40 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago