கோவா அணிக்கு மாறுகிறார் சச்சின் மகன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் இருந்து விலகி கோவா அணியில் இணைய முடிவு செய்துள்ளார்.

22 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கருக்கு 2020-21 சீசனில் சையது முஸ்டாக் அலி தொடரில் ஹரியாணா, புதுச்சேரி அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் உள்ளூர் போட்டிகளின் அடுத்த சீசனில் மும்பையில் இருந்து விலகி கோவா அணியில் இணைய அர்ஜுன் டெண்டுல்கர் முடிவு செய்துள்ளார். இதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திடம் விண்ணப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அர்ஜுன் தனது கேரியரின் இந்த தருணத்தில் மைதானத்தில் அதிகபட்ச ஆட்ட நேரத்தைப் பெறுவது முக்கியம். இந்த அணி மாற்றம் அர்ஜுன் அதிக போட்டிகளில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்தை தொடங்குகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்