சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிறந்த சீருடை உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டது.
சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்புப் பாடலில் அணிந்து இருந்த கருப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
» செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: உதயநிதியை சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்
» கைதிகளின் ஓவியங்களால் மிளிரும் புதுச்சேரி சிறைச்சாலை: ஆக.15-க்கு தயாராகும் 18 அடி சிறப்பு ஓவியம்
பின்னர், ஆடவருக்கான மோஸ்ட் ஸ்டைலிஷ் டீம் விருதை உஸ்பெகிஸ்தான், மங்கோலியா அணிகளுக்கு வழங்கப்பட்டது. மகளிருக்கான மோஸ்ட் ஸ்டைலிஷ் டீம் விருதை டென்மார்க் அணி வென்றது. ஃபேர்-பிளே விருது ஜமைக்கா நாட்டை சேர்ந்த வீரருக்கு வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago