லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்துள்ளார். அந்தப் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் (2017-2021) என அறியப்படுகிறார் ரவி சாஸ்திரி. சர்வதேச கிரிக்கெட்டில் களத்தில் ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்து வரும் பணிகளை கவனித்து வருகிறார். தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு பிறகு மீண்டும் அதே பணியை அவர் மேற்கொண்டுள்ளார்.
இப்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடரின் இரண்டாவது எடிஷனை ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்காக வர்ணனை செய்து வருகிறார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அம்பானி மற்றும் சுந்தர் பிச்சை உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
“கிரிக்கெட் விளையாட்டின் இல்லத்தில் கிரிக்கெட்டை நேசிக்கும் இரு நபர்களின் கம்பெனியுடன்” என அந்தப் படத்திற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் ரவி சாஸ்திரி. அதில் முகேஷ் அம்பானி, சுந்தர் பிச்சை, தி ஹண்ட்ரட் கிரிக்கெட்டை டேக் செய்துள்ளார் அவர்.
» திரைப் பார்வை | மேரி ஆவாஸ் சுனோ | குரல் வழியே மீட்பவனின் கதை!
» செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: பார்வையார்களை கவர்ந்த பாரம்பரிய விளையாட்டுக் கலை நிகழ்ச்சி
இந்தப் படம் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் எடுக்கப்பட்டது என தெரிகிறது. முன்னதாக, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓவர்களில் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago