செஸ் ஒலிம்பியாட் 2022 | மகளிர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு

By பெ.மாரிமுத்து

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ன்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 10-வது சுற்றான நேற்று ஓபன் பிரிவில் இந்தியா பி அணி, உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது.

இதில் கிராண்ட் மாஸ்டரான இந்திய பி அணியின் டி.குகேஷ், உலக ரேபிட் செஸ் சாம்பியனான அப்துசட்டோரோவ் நோடிர்பெக்குடன் மோதினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய டி.குகேஷ் 72-வது நகர்த்தலின் போது நோடிர்பெக்கிடம் தோல்வியடைந்தார். குகேஷுக்கு இந்தத் தொடரில் இது முதல் தோல்வியாக அமைந்தது.

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய சரின் நிகல், 47-வது நகர்த்தலின் போது யாகுபோவ் நோடிர்க்குக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். இதேபோன்று பி.அதிபன், 33-வது நகர்த்தலில் வகிடோவ் ஜகோங்கிருக்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தார். பிரக்ஞானந்தா, சிந்தரோவ் ஜாவோகிரை 77- வது நகர்த்தலில் வென்றார். முடிவில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய பி அணி 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது.

இந்தியா ஏ அணியானது ஈரானை எதிர்த்து விளையாடியது. இதில் அர்ஜுன் எரிகைசி, இதானி பூயாவுக்கு எதிரான ஆட்டத்தை 30-வதுநகர்த்தலின்போது டிரா செய்தார். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஹரிகிருஷ்ணா பென்டலா 60-வது நகர்வின் போது மக்சூட்லூ பர்ஹாமிடம் தோல்வியடைந்தார். விதித் குஜராத்தி 52-வது நகர்த்தலின் போது தபாதபாய் எம். அமீனை வீழ்த்தினார். நாராயணன் 90-வது நகர்வின் போது தனேஷ்வர் பர்தியாவை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய ஏ அணி 2.5-1.5 என்ற கணக்கில் ஈரானை வென்றது.

இந்திய சி அணியானது, சுலோவேக்கியாவுடன் மோதியது. இந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. கங்குலி சூர்யா சேகர்-பெச்சாக் ஜெர்கஸ், கார்த்திகேயன் முரளி - ட்ருஸ்கா ஜுராஜ் ஆகியோர் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன. புரானிக் அபிமன்யு 45-வது நகர்த்தலில் ரெப்கா கிறிஸ்டோபரை தோற்கடித்தார். அதேவேளையில் எஸ்.பி.சேதுராமன் 53-வது நகர்வின் போது காசிக் விக்டரிடம் தோல்வியடைந்தார்.

கஜகஸ்தான் தோல்வி

மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியானது 3.5-0.5 என்ற கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்தது. வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய தானியா சச்தேவ் 31-வது நகர்த்தலின் போது பாலபயேவா செனியாயை தோற்கடித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பக்தி குல்கர்னி 47-வது நகர்வின் போது நக்பயேவா குலிஸ்கானை வீழ்த்தினார்.

ஆர்.வைஷாலி 50-வது காய் நகர்த்தலின் போது அஸவுபயேவா பிபிசாராவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கோனேரு ஹம்பி, 56-வது நகர்த்தலிவ் அப்துல் மாலிக் ஜான்சயாவை தோற்கடித்தார்.

இந்திய பி அணி அபாரம்

இந்திய பி அணியானது, நெதர்லாந்தை 3-1 என்ற கணக்கில் வென்றது. வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பத்மினி ரவுத் 38-வது நகர்த்தலின்போது வான் ஃபாரஸ்ட் மக்டெல்ட்டை தோற்கடித்தார். கருப்பு நிற காய்களுடன விளையாடிய கோம்ஸ் மேரி அன் 43-வது நகர்வின் போது ரட்ஸ்மா ரோஸாவை வீழ்த்தினார்.

திவ்யா தேஷ்முக் 54-வது நகர்வின் போது லாஞ்சாவை தோற்கடித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய வந்திகா அகர்வால் 59-வது நகர்த்தலின் போது பெங் ஹாவோயிகிடம் தோல்வியடைந்தார்.

இந்திய சி அணியானது சுவீடனை எதிர்கொண்டது. இதில் ஈஷா கரவாடே, பியா கிராம்லிங்கிற்கு எதிரான ஆட்டத்தை 46-வது நகர்த்தலின் போதும் சாஹிதி வர்ஷினி, அனா கிராம்லிங்கிற்கு எதிரான ஆட்டத்தை 53-வது நகர்த்தலின் போதும் டிராவில் முடித்தனர்.

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரத்யுஷா போதா 64-வது நகர்த்தலின் போது ஜோஹன்சன் விக்டோரியாவை தோற்கடித்தார். பி.வி.நந்திதா 54-வது நகர்வின் போது அக்ரெஸ்ட் இன்னாவை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தி சி அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய ஏ அணி முன்னிலை

மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி தங்கப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. 10 சுற்றுகளின் முடிவில் இந்திய ஏ அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் போலந்து, ஜார்ஜியா, உக்ரைன், அஜர்பைஜான் அணிகள் தலா 16 புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இன்று நடைபெறும் கடைசி சுற்று ஆட்டம் இந்திய ஏ அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

உஸ்பெகிஸ்தான் முன்னிலை

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான், அர்மேனியா ஆகிய அணிகள்10 சுற்றுகளின் முடிவில் தலா 17 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்தியா பி, இந்தியா ஏ, அமெரிக்கா அணிகள் தலா 16 புள்ளிகளைப் பெற்று அடுத்த இடங்களில் உள்ளன. இதனால் 11-வது சுற்று ஆட்டங்கள் உஸ்பெகிஸ்தான், அர்மேனியா, இந்தியா ஏ, இந்தியா பி அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளன. அமெரிக்காவைத் தொடர்ந்து நெதர்லாந்து, ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி, மால்டோவா, செர்பியா ஆகிய அணிகள் தலா 15 புள்ளிகளுடன் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்