ஆசிய கோப்பை 2022 | இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு: கோலி & ராகுல் உள்ளே

By செய்திப்பிரிவு

மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் அணியில் இடம் பெற்றுள்ளனர். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை 2022 தொடர் அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரையில் இந்தத் தொடர் நடைபெறுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை என ஆறு அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கின்றன. ஆறாவது அணி தகுதி சுற்றில் மூலம் தேர்ச்சி பெற்று இந்தத் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் நடைபெற உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தகுதி பெறும் அணியும் குரூப் ‘ஏ’ சுற்று போட்டியில் விளையாடுகின்றன. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்…

ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான்.

குரூப் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி விளையாடுகின்றன. அவர்கள் இருவரும் பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திற்கான சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ரிசர்வ் வீரர்களாக ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் மற்றும் தீபக் சஹார் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

குரூப் சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வரும் 28-ம் தேதி அன்று எதிர்கொள்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்